Saturday 2 February 2013

வெள்ளியங்கிரி மலையின் அனுபவம் - Velliangiri hills


வெள்ளியங்கிரி மலை - Velliangiri hills இது இந்தியாவின் தென் கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில்  உள்ள இந்த அழகிய மலையானது தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள இந்த மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது இது புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் மேகம் நம்மை தடவி செல்ல. சுத்தமான காற்றும்,இயற்கை அன்னையின் பசுமைமிக்க காடுகளும் நம்மை பரவசம் அடிய செய்கிறது
மலையடிவாரத்தில் இருந்து சுமார் 5.50கிமீ  முதல் 6கிமீ வரை இருக்கும்
மலையடிவாரத்தில் உள்ள கோவில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் அம்மன் செளந்திர நாயகியுடன் இணைந்து காட்சி அளிக்கிறார். இவருடன் விநாயகர், முருகன் என பல கடவுள்களும் உள்ளனர். மலையடிவாரத்தில் இருந்து 2.5 கிமீ தொலைவில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது 

மலை ஏற்றம்

முதல் மலை முழுவதும், கற்களால் ஆன படிக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு படியும் அரை அடி முதல் ஒரு அடி வரை உயரம் இருக்கும். ஒரு மணி நேரம் கழிந்த பிறகு நாம் அணிந்திருக்கும் உடையை  கசக்கிப் பிழியும் அளவிற்கு வியர்க்கும். முதல் மலை மட்டும் சிறிது கடினம். ஏறி வரும் போது நம்முடன் வரும் நண்பர்கள் புலம்ப ஆரம்பிப்பர்.., இன்னும் முதல் மலையே முடியலையா... என்று குட என்னுவர்

ரெண்டாவது மலைக்கு வந்துட்டோம்கறது, வெள்ளை விநாயகர் கோயில்    தான் அடியாளம் இங்க இருந்து படிகள் குறைய ஆரம்பிக்கறது தெரிஞ்சுக்கலாம். ரெண்டாவது மற்றும் மூனாவது மலை முழுவதும் வழுக்குப் பாறைகளை செதுக்கிய படிகள் தன். படிகளின் உயரம் கால் அடிகுட இருக்காது மழை காலங்களில் பாறை படிகள் வலுக்கும்.

நாலாவது மலைக்கு வந்ததும் குளிர் காற்று வீசும். இந்த மலை முழுவதும் மரங்களின் வேர்களுக்கு நடுவே தான் பாதை அமைந்திருக்கும். குளிர்காற்றை சுவாசித்துக் கொண்டு, பறவைகள் மற்றும் மரங்களின் அசையும் சத்தத்தை நடுவே செல்வது ஒரு அற்புத அனுபவம்.
 ஐந்தாவது மலை மரங்களின் எண்ணிக்கை குறைந்து சிறு சிறு தாவரங்கள் தான் அதிகம் இருக்கும் இந்த மலை முழுவதும் சேறு போன்ற வழுவழுப்பான மண்ணப் பார்க்கலாம். இங்கு நன்றாக குளிராகவும் இருக்கும்  . ஐந்தாவது மலையின் உச்சியில் செல்லும் போது, 
ஐந்தாவது மலையில் இருந்து ஆறாவது மலைக்கு உட்கார்ந்தும் தான் போகனும். ஏன்னா, ஆறாவது மலைக்குச் செல்ல செங்குத்தாக கீழே இறங்க வேண்டும். 
ஆறாவது மலையில் தான் "ஆண்டி சுனை" என்று ஒரு சிரிய நீர்த்தேக்கம் இருக்கும். இங்கே உள்ள நீர் உறையும் அளவிற்கு குளிர் இருக்கும் நம் இங்கு குளியல போட வேண்டியது தான். இந்த நீரில் இறங்கியதும் உறையும் அளவு குளிர் உடனே மேலா வந்துவிட வேண்டும் அல்லது முகம், கை மற்றும் கால் மட்டும் நனைத்து கொள்ளவும். அதிக நேரம் தண்ணீரில் இருந்தால் நமக்கு ஆபத்தாக அமையும்.

ஏழாவது மலை. நம் சிவன் அமர்திருக்கும் அழகிய மலை. இந்த மலை ஏறும்போது நம்முள் ஒரு உணர்வை உணர முடியும். இது மிகவும் செங்குத்தான மலை. மெதுவாக தவழ்ந்தும் தான் போகனும். படிகளும் இருக்காது இந்த மலை சுற்றியும் அடர்ந்த பள்ளத்தாக்கு. இந்த மலைபார்பதுக்கு சிறியதாக தோன்றும் ஆனால் ஏறுவது கடினம்.வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதியை அடிந்ததும் நமக்கு உண்டாகும் சந்தோசத்திற்கு அளவே இல்லை

இரண்டு கற்களுக்கு நடுவே வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதி அமைந்திருக்கும். இங்கே ஒரு சிறிய சிவலிங்கம், தீப ஆராதனை காட்டபடும் திருநீறு பூசி கொண்டு. இறைவன் சன்னதியில் இருந்து வெளியே வரும்போது, நமது உடலும் உள்ளமும்  புத்துணர்வு அடைவதை உணர முடியும்
மலையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் போது குளிர்ந்த காற்றும், மேகங்கள் நம்மை தொட்டு செல்லும். இங்க இருந்து பார்க்கும் போது  பசுமையான பள்ளத்தாக்கு, சிறுவானி நீர்த்தேக்கம், வாளையார் மலைத்தொடர், கேரள மலைத்தொடர்கள் நம் கண்கள் கொள்ளை கொள்ளும்இங்கு சிறிது நேரம் தியானம் செய்தல் நாம் வந்த களைப்பு போய் புதுபொலிவுடன் இறங்க ஆரம்பிக்கலாம்  

மலையில் இருந்து இறங்கும் போது நாம் அடிடுத்து வைப்பது மெதுவாகவும் கவனமாகவும்  இருக்க வேண்டும். கால்கள் நம் பேச்சில் போகாது இதற்க்கு உதவியாக மூக்கில் குச்சி எடுத்து செல்ல வேண்டும் அப்போது அந்த குச்சியின் அருமை புரியும். வருடத்திருக்கு ஒருமுறையாவது சென்று வந்தால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 எடுத்துசெல்வேண்டியவை
தண்ணீர், முங்கில் குச்சி, சிறிய டார்ச் லைட், குல்கோஸ்,பேரிசம் பம், 2 அப்பிள்

2 comments: